Nizhale Nijamaanaal – Intro.

ஹாய் ப்ரண்ட்ஸ்,

உங்கள் அனைவரையும் அதிகநாள் காத்திருக்க வைக்காமல், இதோ… அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க ஓடி வந்துவிட்டேன்.

தலைப்பு : நிழலே நிஜமானால்.
நாயகி : ஆனந்தி (ஆனந்தவல்லி)

நாயகன் : அவனை இந்த கதையில் தேடவேண்டியது இருக்கலாம். சிக்கினால் பார்ப்போம்.

பூர்வஜென்ம கதைகளை வாசிக்கையில் எப்பொழுதுமே எனக்குள் சிறு பிரமிப்பு எழும். இத்தனை வருடங்களில் அப்படி ஒரு ரிஸ்க் எடுக்க தயங்கி இருந்தேன்.

ஆனால் முதல்முறையாக என் தயக்கத்தை உடைத்து, பூர்வஜென்ம கதைக்குள் அடியெடுத்து வைக்கிறேன்.

பூர்வஜென்மத்தின் கதை என்றாலே… அது அந்த நினைவுகள் வருபவர்களின் கதையாகத்தான் இருக்க வேண்டுமா? அவர்களுக்கு மிகவும் பிடித்த, அவர்களை பாதித்த தோழமையின் கதையாக(நினைவாக) இருக்க கூடாதா?

இப்படியான என் கேள்விக்கு விடையாக உருவானதுதான் இந்த கதை. உங்களை எல்லாம் ரொம்ப குழப்பறேனா?

இந்த குழப்பம் எல்லாம் கதையை நீங்கள் வாசிக்கத் துவங்கியபிறகு ஒரு தெளிவுக்கு வந்துவிடும் என எண்ணுகிறேன்.

எனது மற்ற கதைகளுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை, இந்த கதைக்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் முன்னால் வருகிறேன்.
(நிறைய தோழிகளுக்கு நாயகன் இல்லை, எனச் சொன்னவுடனேயே கதையில் பெரிய ஆர்வம் தோன்றவில்லை என்பது புரிகிறது. இது எனது சிறு முயற்சி மட்டுமே).


உங்கள் ஆதரவை நாடும் தோழி,
இன்பா அலோசியஸ்.

5 thoughts on “Nizhale Nijamaanaal – Intro.

  1. Sooper mam.. naan ethana naal vanthu vanthu paarthen teriyuma puthusa story start panreengalaa nu.. sema mam.. ippadi thaan kathal brahma kum sonnenga.. first time police kathai nu.. athey maathiri ithukum solrenga.. soo story ippove success thaan.. waiting eagerly and eppovum pola Wednesday and Saturday vaa mam..

Leave a comment